உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் பெற்ற நீலகிரி மலை மாவட்டத்தில், இயற்கையைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குடிநீராகப் பயன்படுத்தும் பவானி ஆற்றில், கழிவுகள் கலக்காமல் இருக்க, சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் இணைந்து ஆற்றில் உள்ள கழிவுகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணிகள் தொடங்கினர்.
ஆறுகளை சுத்தப்படுத்தும் பணி - கையிலெடுத்த சமூக ஆர்வலர்கள்! - clean the river
நீலகிரி: பவானி ஆற்றில் கழிவுகள் கலக்காமல் இருக்க, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூரில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பணியை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடங்கியுள்ளனர்.

ஆறுகளை சுத்தப்படுத்தும் பணி
ஆறுகளை சுத்தப்படுத்தும் பணி
இதனால், இயற்கையும், தண்ணீரையும் பாதிக்காமல் செய்ய மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி வரும்காலங்களில், ஆற்றில், குப்பைகள், இறைச்சிக்கழிவுகளை கொட்டினால், இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.