நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
இந்த நிலையில் குன்னுார் அருகே உள்ள சோகத்துரை வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வன விலங்குகளின் உறுமல் சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தபோது, இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது.