தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களை அச்சுறுத்தும் காட்டெருமை - குன்னூரில் மக்களை அச்சுறுத்தும் காட்டெருமை

நீலகிரி: சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

gaur
gaur

By

Published : Mar 17, 2020, 10:25 AM IST

நீலகிரி மாவட்டம் 65 விழுக்காடு வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள காடுகளில் யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. அவ்வப்போது விலங்குகள் காட்டை விட்டு உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்தச் சூழலில் மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

நீலகிரி, ஊட்டி, குன்னூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடிய காட்டெருமைகள் மக்களை தாக்குகின்றன. இதனிடையே, குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதிக்கு காட்டெருமை ஒன்று நாள்தோறும் வந்து செல்வதால், குழந்தைகளும், முதியவர்களும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

ஊரை சுற்றும் கா்டடெருமை

குடியிருப்பு ஒற்றையடி பாதையில் சர்வ சாதாரணமாக நாள்தோறும் பயணிக்கும் காட்டெருமையால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது, மக்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமையை வனத் துறையினர் உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details