தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிம்ஸ் பூங்கா: ஜாதிக்காய் ஊறுகாய், ஜெல்லி தயாரிக்கும் பணி துவக்கம்!

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் 45 நாள்களுக்கு பிறகு, ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணி தொடங்கியது.

சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில்  ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணி துவங்கியது
சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணி துவங்கியது

By

Published : May 12, 2020, 11:42 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். மேலும் நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெரி, பிளம்ஸ் ஆகியவை மட்டுமின்றி, திராட்சை, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் போன்றவற்றை கொண்டு பழரசம் தயாரிக்கப்படுவதோடு, ஜாதிக்காய், மால்மெட் ஆரஞ்ச், லெக்கோட் ஆகியவற்றின் ஜாம், ஊறுகாய் போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இங்கு 45 நாள்களுக்கும் மேலாக பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக பொள்ளாச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ ஜாதிக்காய்கள் மூலம், பழவியல் நிலையத்தில், ஊறுகாய் மற்றும ஜெல்லி தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. இங்கு பணியாளர்கள் தகுந்த இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவ குணம் வாய்ந்த ஜாதிக்காய் ஊறுகாய் அரை கிலோ 110 ரூபாய்க்கும், 300 கிராம் ஜாதிக்காய் ஜெல்லி 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை தோட்டக்கலைக்கு சொந்தமான கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க:47 நாள்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய புரசைவாக்கம்!

ABOUT THE AUTHOR

...view details