நீலகிரி:குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவின் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இங்கு வரும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 800க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலத்தில் உள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், ஓட்டுநர்கள், உணவக உரிமையாளர்கள் அதிக வருவாய் பெற்று வந்த நிலையில் தற்போது ஊரடங்கால் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.