நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில் 61ஆவது பழ கண்காட்சி நடைப்பெறுகிறது. இதற்காக இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது. இதில் பால்சம், சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வகைகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
குன்னூரில் 61ஆவது பழ கண்காட்சி... அலைமோத உள்ள சுற்றுலா பயணிகள் - SIMS park
நீலகிரி: குன்னூர் 61ஆவது பழ கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குன்னூர்
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்கா பண்ணையில் மலர் நாற்றுகள் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகளில் கோடை சீசனுக்கு பூங்காவில் வைக்கப்பட உள்ளது.
மேலும் ஒன்றரை டன் சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி, மயில் உள்ளிட்ட உருவங்களும் வடிவமைக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த பழ கண்காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.