தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்ப்பரேஷனாக மாறும் அருவங்காடு தொழிற்சாலை: மக்கள் கையெழுத்து இயக்கம்! - Signature movement for save cordite factory

நீலகிரி: பழமைவாய்ந்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை கார்ப்பரேஷனாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறி குன்னூர் பகுதியில் மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுவருகிறது.

கார்ப்பரேஷனாக மாறும் அருவங்காடு தொழிற்சாலை: மக்கள் கையெழுத்து இயக்கம்!
கார்ப்பரேஷனாக மாறும் அருவங்காடு தொழிற்சாலை: மக்கள் கையெழுத்து இயக்கம்!

By

Published : Sep 26, 2020, 11:30 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 115 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்காகச் சேவையாற்றிவருகிறது.

1962, 1967ஆம் ஆண்டுகளில் இந்தியா-சீனா போர்கள் 1965, 1971ஆம் ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போர்களிலும், குறிப்பாக 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் வெற்றிக்கு இத்தொழிற்சாலையும், தொழிலாளர்களும் சேவை புரிந்துள்ளனர்.

கோவிட் நோய்த்தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொழிலாளர்கள் லட்சம் லிட்டர் கிருமிநாசினி உற்பத்தி செய்து உள் மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் இந்தத் தொழிற்சாலை கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டால் பணி நிரந்தரம் இருக்காது. சமூகரீதியாகப் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்காது. இத்தொழிற்சாலையை சார்ந்திருக்கும் வணிகம், சிறு குறு தொழில்கள் நலிந்துவிடும்.

கையெழுத்து

எனவே, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை கார்ப்பரேஷன் ஆக்கும் கொள்கை முடிவினை மறு பரிசீலனை செய்து பழமை வாய்ந்த நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாய் விளங்கும் பெருமைமிக்க தொழிற்சாலையை நவீனப்படுத்தி அரசுத் துறையிலேயே வைத்து நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details