நீலகிரி: குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்திய நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ராணுவ வீரர்களின் உடல்கள் நேற்று (டிசம்பர் 9) குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சூலூர் விமான தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
நீலகிரியில் இன்று கடையடைப்பு நாடு முழுவதும் உள்ள இந்திய மக்கள், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாவட்டம் முழுவதுமுள்ள கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: HELICOPTER CRASH : 'பைலட் வருண் சிங்கை குணமடைந்தவுடன் நேரில் சென்று பார்க்கணும்' - மீட்டவர் உருக்கம்!