நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எல்க்ஹில் பகுதியில் வசித்துவந்தவர் சேது ரகுபதி (38). தச்சரான இவர் பல தொழில்களை செய்துவந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்தவந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் சேது ரகுபதி மீது புகாரளித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 38 ஆண்டு சிறை! - 38 வருடம் சிறைத்தண்டனை
நீலகிரி: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு ஐந்து பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறை தண்டனை ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார்.
புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் சேது ரகுபதியை 2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார்.
அதில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சேது ரகுபதிக்கு ஐந்து பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.