தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு! - POCSO Act

நீலகிரி: கூடலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சுப்பிரமணி

By

Published : Sep 18, 2019, 12:38 PM IST

Updated : Sep 18, 2019, 4:28 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி(25). இவர் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றுவது வழக்கம். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகமாக மது அருந்தி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுப்பிரமணி

இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சுப்பிரமணியை பிடித்து விசாரித்துள்ளனர். அதையடுத்து, விசாரணைக்கு பின் சுப்ரமணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Last Updated : Sep 18, 2019, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details