நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அங்குள்ள ஆறுகள், ஓடைகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓடைகளின் அருகே கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டுமானப் பணிக்கும் விவசாயத்திற்கும் ஆறுகளில் இருந்து செல்லும் தண்ணீரில் தடுப்பு ஏற்படுத்தி மின் மோட்டார் மூலம் திருடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆறுகளில் தடுப்பு அமைத்து தண்ணீர் திருட்டு
நீலகிரி: குன்னூர் பகுதியில் உள்ள ஆறுகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் திருடப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறு
இப்பகுதியின், முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜிம்கானா தடுப்பணை உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. ஆறுகளில் தண்ணீர் திருட்டு ஏற்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் தண்ணீர் திருட்டு குறித்து ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.