நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதியாகும். இங்கு சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது வன விலங்குகள் உணவு, நீர் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன.
அதுபோல் வெலிங்டன் ராணுவப் பகுதிக்கு ஒற்றை காட்டெருமை சாலையில் வந்துள்ளது. அதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஆபத்தை உணராமல் காட்டெருமையின் அருகே சென்று செல்பி எடுத்தனர். இதனால் அவர்களை காட்டெருமை தாக்கும் ஆபத்து உள்ளது.