நீலகிரி: தமிழ்நாட்டில் மலைகளின் அரசி என்று அழைக்கபடும் நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இதில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும் தொடங்கும்.
தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்தப் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக நடவு செய்யபட்டிருந்த 120 வகைகளில் 2.5 லட்சம் மலர்கள் பூங்காவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
உதகை அரசு தாவரவியல் பூங்கா மேலும் 12 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, சால்வியா, டெய்சி, காலண்டுல்லா, ஆஸ்டர் உள்ளிட்ட பல வகையான பூக்களும் இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது சீசனின் மலர் கண்காட்சிக்காக மலர் தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று (செப்.24) தொடங்கிவைத்தார். சுற்றுலா பயணிகள் இந்த மலர் கண்காட்சியை காண அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க:பெண்கள் துணிகளை துவைக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு