தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் செபஸ்தியாா் தேவாலய திருவிழா - குன்னூர் செபஸ்தியாரின் திருவீதி ஊா்வலம்estival

நீலகிாி: குன்னூர் புனித செபஸ்தியாா் தேவாலயத்தின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Sebastian Church
Sebastian Church

By

Published : Jan 27, 2020, 12:34 PM IST

நீலகிாி மாவட்டம், குன்னுாா் புனித செபஸ்தியாா் தேவாலயத்தின் பங்கு திருவிழா ஜனவாி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நவநாள் திருப்பலி, ஜெபமாலை, மறையுறை ஆகியவை தினமும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று (ஜன.26) புனிதாின் ஆசிா்வதிக்கப்பட்ட அம்புகள் வீடுகளுக்கு ஊா்வலமாகக் கொண்டு சென்று ஜெபம் நடைபெற்றது. மாலையில் திருநாள் திருப்பலி நடைபெற்றது. பின்னர் செபஸ்தியாாின் திருவுருவம் திருவீதி ஊா்வலமாக நகராட்சி அலுவலகம் மெளண்ட்ரோடு வழியாக குன்னூர் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

செபஸ்தியாரின் திருவீதி ஊா்வலம்

இந்த ஊா்வலத்தில் ஏராளாமான கிறிஸ்தவா்கள் கைகளில் குடைகளைப் பிடித்தவாறு கலந்துகொண்டனர். ஊர்வலத்தையொட்டி இரவில் கண்களைக் கவரும் வகையில் வானவேடிக்கை நடைபெற்றது.

இதையும் படிங்க: புற்றடி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

ABOUT THE AUTHOR

...view details