நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தும் நிலை இருந்தது. குறிப்பாக மவுண்ட் ரோட்டில் வாகன நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. இதனால் மவுண்ட் ரோடு வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால் வி.பி. தெரு ஓடையின் மேல் கான்கிரீட் தளம் அமைத்து வாகன நிறுத்துமிடம் 2006-2007ஆம் ஆண்டு 42 லட்சம் ரூபாயில் திறக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. 2017ஆம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டதில் சிவஞானம் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். அதன்படி 2017ஆம் ஆண்டிற்கு 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 2018ஆம் ஆண்டிற்கு 10 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாயும் 2019ஆம் ஆண்டிற்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாயும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.