தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் - நீலகிரி மருத்துவமனைக்கு சீல்

நீலகிரி: குன்னுாரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஐந்து வணிகக் கட்டங்கள், தனியார் மருத்துவமனைக்கு நகராட்சி அலுவலர்கள்  சீல் வைத்தனர்.

sealed-to-private-hospital
sealed-to-private-hospital

By

Published : Jul 14, 2020, 9:49 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வந்த தனியார் கண் மற்றும் பல் மருத்துவமனையின் மேல் தளம் நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுஉள்ளது.

அதனால் நகராட்சி ஆணையர் பாலு அதற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் நகராட்சி அலுவலர்கள் அம் மருத்துவமனைக்கு இன்று (ஜூலை14) சீல் வைத்தனர்.

அதேபோல மவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வந்த உஜ்ஜீவன் ஸ்ஃமால் பைனாஸ் வங்கி, ஒட்டுப் பட்டறை கட்டடம், கிரேஸ்ஹில் கட்டடம், மவுண்ட் பிளசன்ட் கட்டடம், மோர்ஸ் கார்டன் கட்டங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:உரிமம் இல்லாமல் செயல்பட்ட 'மூலிகை மைசூர்பா' கடைக்குச் சீல் - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details