நீலகிரி மாவட்டம் கேத்தகிரி தனியார் பள்ளியல் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இக்கண்காட்சியில் தங்களது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
சவ்வூடுபரவல், அறிவியலும் கலையும் இணைந்த தஞ்சை பெரியகோயில், கழிவு நீரில் கலக்கும் மழை நீரை மறுசுழற்சி செய்யும் முறை, பண்டை நாகரிக முறைகள் பற்றி புதிய தகவல், அறிவியலும் கணிதமும் இணைந்து எளிய முறையில் கணித பயிற்சி, உலக நாணய கண்காட்சி, விசாயிகளுக்கு குறைந்த நீர் பாய்ச்சல் முறை, புத்தகக் கண்காட்சி, மினி ரோபோக்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.