நீலகிரி: கடந்த 13ஆம் தேதி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோத்தகிரி காவல் துறையினர் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
சயானிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை
இந்நிலையில் இன்று (ஆக.17) உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சயானிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ், கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் இருந்தனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள்?
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதால் சில முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் குற்றவாளி சயானிடம் விசாரணை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு
கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு 40 வயதான பாதுகாப்புக் காவலர், ஓம் பகதூர் வாயில் துணி அடைக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவருடன் வேலை செய்த கிருஷ்ண பகதூரும் கடுமையான காயங்களுடன் இருந்தார். இது ஒரு கொள்ளை முயற்சி என்று காவல் துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு இந்தச் சம்பவம் நடந்து 2 மாதங்களுக்குப் பிறகு, கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்த 24 வயது இளைஞர் தினேஷ்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
முதல் குற்றவாளி சயானிடம் விசாரணை இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் சந்தேகப்பட்டனர். பின்னர், கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்தார். சயானும் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்.
ஆனால், அந்த விபத்தில் அவருடைய மகளும் மனைவியும் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை காவல் துறையினரால் மீட்க முடியவில்லை.
கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க:சுருக்குமடி வலை... மீனவர்களிடையே தகராறு: ஆட்சியர் வரை சென்றது விவகாரம்!