தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 பேரை கொன்ற சங்கர் யானை பிடிபட்டது - Sankar Elephant Roaming in Nilgiris

நீலகிரி: சேரம்பாடி பகுதியில் பிடிபட்ட சங்கர் யானை, முதுமலையில் உள்ள அபயாரண்யம் பகுதியில் கும்கி யானைகளின் உதவியுடன் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் புதிதாக அமைக்கபட்ட கிராலில் (மரக்கூண்டில்) அடைக்கப்பட்டது.

சங்கர் யானை
சங்கர் யானை

By

Published : Feb 13, 2021, 12:00 PM IST

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் தந்தை, மகன் உள்பட 3 பேரை காட்டுயானை சங்கர் மிதித்துக் கொன்றது. இதனையடுத்து யானையை பிடிக்குமாறு சேரம்பாடி பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.

இதனையடுத்து யானையைப் பிடிக்க வனத்துறையினர் முடிவுசெய்தனர். சுமார் 60 நாள்களாக யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயன்று வந்தனர்.

2 மணி நேர போராட்டத்திற்குப் பின் சங்கர் யானை கிராலில் அடைப்பு
ஆனால், யானை கேரளா வனப்பகுதியில் சென்றதால் பிடிக்க முடியவில்லை. மூன்று முறை மயக்க ஊசி செலுத்தியும் சங்கர் யானை தப்பியது. இந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் அசோகன், விஜய ராகவன், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் மருத்துவர் ராஜேஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று (பிப். 12) சங்கர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்கம் அடைந்த சங்கர் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டது. லாரியில் இருந்து கீழே இறக்கப்பட்ட யானை அபயராண்யம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மரக்கூண்டில் அடைக்க வனத்துறையினர் பணிகளை தொடங்கினர்.ஆனால், யானை லாரியில் இறங்கிய பின்னர் கிரால் (மரக்கூண்டுக்குள்) செல்ல அடம் பிடித்தது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி கும்கி யானைகளின் உதவியுடன் கிராலுக்குள் அனுப்பப்பட்டது.

யானைக்கு சுமார் 20 நாள்களில் கிராலில் உணவு, தண்ணீர் மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு யானை மனிதர்களின் கட்டளைக்கு ஏற்பட கீழ் படிந்து நடக்க பயிற்சி அளிக்கும் பணி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details