நீலகிரி:நீலகிரி மாவட்ட திமுக வாக்குச் சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் ஊட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்துக்கொண்டர்.
கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, "வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேசத்தைக் காக்க வேண்டிய தேர்தல், தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு திமுக தலைவர் தோளின் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியைச் சிறப்பாக செய்ய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ என்ற பெயராலேயே பயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் பணத்தை எடுத்து தனிநபருக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதும், அதை மறுக்கவில்லை. மாறாக மவுனம் கடைப்பிடிக்கிறார்.
மணிப்பூரில் இன அழிவு ஏற்பட்டும், இதுவரை அதுகுறித்து வருத்தமோ, மன்னிப்போ கூறவில்லை. மாறாக உள்துறை அமைச்சர் அதை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே குரல் எழுப்புகிறார். தேசத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை ஸ்டாலின் மட்டுமே எதிர்த்து வருகிறார்.
இதையும் படிங்க:கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பயணிகளின் கவனத்திற்கு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு என்ன?