ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலைகளின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
சர்வதேச தேயிலை ஏலம் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் பேசுகையில், “இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 கோடி கிலோ தேயிலை ரஷ்யாவிற்கும், 1.5 கோடி கிலோ தேயிலையானது உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 40 சதவீதம்வரை நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நீலகிரியில் இருந்து மட்டும் 2 கோடி கிலோ தேயிளைகள் ரஷ்யாவிற்கும், 1 கோடி கிலோ உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்தது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சிக்கலை களைய ரஷ்யாவின் கரன்சியான ரூபல் மூலம் வர்த்தகத்தை தொடங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.