பொங்கல் விழாவில் ஆட்சியர்
நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக உதகை படகு இல்லத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் துறை கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் விழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்திருந்த நிலையில், புது பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகர், தோடர் இன மக்களின் கலாசார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்னசென்ட் திவ்யா நடனம்
அதில் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்துவந்த படுகர், தோடர் இன பெண்கள் வட்டமாக நின்று நடனமாடினர். அதனை அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா படுகர் இன மலைவாழ் பெண்களுடன் இணைந்து நடனமாடினார்.
அதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகளும் மலைவாழ் மக்களோடு சேர்ந்து நடனமாடி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
மலைவாழ் மக்களோடு நடனமாடிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிறப்புப் படகுப் போட்டி
அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கிடையே சிறப்புப் படகு போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:உரியடி' 'மாட்டுவண்டி சவாரி' பொங்கலில் கலக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!