தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்! - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

rs-3-lakh-relief-for-victims-of-electrocution
rs-3-lakh-relief-for-victims-of-electrocution

By

Published : Sep 22, 2020, 10:45 PM IST

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குன்னுார் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை வாங்க வந்த தம்பதியினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, 25 மாற்றுதிறனாளிகளுக்கு, உதவித்தொகைக்கான புத்தகம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, குன்னுார் அருகேவுள்ள ஆலாடா வேலி தனியார் எஸ்டேட் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மங்கம்மாள், ஜெகதளாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரவீன் ஆகியோரின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்பட அலுவலர்கள், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:யானைகள் வழித்தடத்தில் பணி தொடங்கிய நெடுஞ்சாலைத் துறை: கைவிடக்கோரி வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details