தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருள் கொடுக்க தடை போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக,நீலகிரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மாவட்ட நிர்வாகத்தினர் வாகன சோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில்,கோத்தகிரி -மேட்டுப்பாளையம்சாலையில்உள்ள சோதனைச்சாவடியில்நேற்று (மார்ச் 3) நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த வாகனம் ஒன்றை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவ்வாகனத்தை சோதனை செய்தபோது, அதில்ரூபாய் 70 ஆயிரம்எடுத்துவரப்பட்டது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால்அந்தத் தொகையைபறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, கட்டபெட்டு பகுதியில் நடத்திய வாகனச் சோதனையில் 1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயும், குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் 73 ஆயிரம் ரூபாயும் தேர்தல் அலுவலர்கள் கைப்பற்றினர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் இளைஞருக்கு சரமாரி வெட்டு - போலீசார் விசாரணை!