நீலகிரி: குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் டிசம்பர் 8ஆம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதைப் பார்த்தவுடன் நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் உடனடியாக வீரர்களை மீட்க முயற்சித்தனர்.
அப்போது ஹெலிகாப்டரில் பற்றியெரிந்த தீயை வீடுகளில் இருந்த நீரைக் கொண்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து காவல் துறையினர், ராணுவத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசிய குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கிராமத்தைத் தத்தெடுத்த ராணுவம்
வீரர்களை மீட்டு கொண்டுசெல்ல தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து மீட்புப் பணிக்கு உதவினர். எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் மனிதநேயத்துடன் நடந்துகொண்ட கிராம மக்களின் செயல் அனைவரது இதயத்தையும் ஈர்த்தது.
இதனையடுத்து சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்தக் கிராமத்தைத் தத்தெடுப்பதாக சமீபத்தில் ராணுவம் அறிவித்தது. அதன்படி அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதிவரை கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளுக்கு மாதமொரு முறை ஏற்பாடு செய்யப்படுவதுடன், மேல்சிகிச்சைக்கு ராணுவ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிக்கு நிதி ஒதுக்கீடு
இக்கிராமத்தினர் நீர், சாலை, அடிப்படை வசதிகள் தேவை எனவும் அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர். இந்நிலையில் வண்டிசோலை ஊராட்சிக்குள்பட்ட நஞ்சப்பசத்திர கிராமத்தினரின் கோரிக்கை குறித்து குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கனிதா நேற்று (டிசம்பர் 15) நேரில் ஆய்வுசெய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் பேசுகையில், "குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் கோரிக்கையான தடுப்புச்சுவர், நீர், நடைபாதை வசதி ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும்” என்றார்.
இதையும் படிங்க: "கனிமவளத்துறையில் எந்த ஒரு குறையுமில்லை..!":இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி