தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விற்பனையாகாமல் அழுகிய தர்பூசணி:  ஊரடங்கால் பாதித்த வியாபாரிகள்! - ஊரடங்கால் தர்பூசணி விற்பனை சரிவு

நீலகிரி: ஊரடங்கு காரணமாக கோடைகளில் அதிகம் விற்பனையாகும் தர்பூசணி பழங்கள் வாங்க ஆளில்லாமல் அழுகியதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

விற்பனையாகாமல் காணப்படும் தர்பூசணி பழங்கள்
விற்பனையாகாமல் காணப்படும் தர்பூசணி பழங்கள்

By

Published : Apr 15, 2020, 2:07 PM IST

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் தேவைக்காக மட்டுமே, வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இதனால், கோடைக்காலத்தில் அதிகம் விற்பனையாகும் தர்பூசணி பழங்கள் தேக்கமடைந்தன. கடந்த 20 நாட்களுக்கு முன்பு, உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வெலிங்டன் சாலையோரம் பகுதியில் ஆயிரத்து 500 கிலோ தர்பூசணி பழங்கள் வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டன.

விற்பனையாகாமல் காணப்படும் தர்பூசணி பழங்கள்

தற்போது, சாலையில் போக்குவரத்து இல்லாமலும், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததாலும், தர்பூசணி பழங்கள் அழுகும்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க:'நிபந்தனைகளுடன் மீன்பிடிக்கச் செல்லலாம்' - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details