தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சி அமைத்தவுடன் உதகையில் ’ரோப்கார் திட்டம்’

நீலகிரி: திமுக ஆட்சி அமைத்தவுடன் உதகையில் உள்ள சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுவதுடன் ரோப்கார் திட்டம் கொண்டு வரப்படும் என தொகுதியில் வென்ற காங்கிரஸைச் சேர்ந்த ஆர். கணேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ்
காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ்

By

Published : May 4, 2021, 9:47 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஆர்.கணேஷ் சேரிங்கிரஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிகையில், “கடந்த முறை சட்டப்பேரவைத் உறுப்பினராக இருந்த போது அளித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், மருத்துவ கல்லூரி அமைக்கபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் முதல்வரானதும் அவரது வழிகாட்டுதல்படி உதகை நகரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மேம்படுத்தபடும். குறிப்பாகப் நீண்ட காலமாக உள்ள ’ரோப்கார் திட்டம்’ கொண்டு வரப்படும்” என்றார்.


இதையும் படிங்க:அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த டிராபிக் ராமசாமி!

ABOUT THE AUTHOR

...view details