தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை காரணமாக ராட்சத பாறைகள் குடியிருப்பு பகுதிகளில் விழும் அபாயம்..! - குன்னூர் கரன்சி டேன்டீ குடியிருப்பு

நீலகிரி: தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் குடியிடுப்பு பகுதிகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

rocks are at risk of falling into streets

By

Published : Nov 16, 2019, 3:46 AM IST

Updated : Nov 16, 2019, 4:13 AM IST

நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடந்து மழை பெய்ந்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் மரம் முறிந்து விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறைகள் குடியிடுப்பு, சாலைகளில் விழுகிறது. குன்னூர் டேன்டீ குடியிருப்பு பகுதியில் வனப்பகுதியிலிருந்து உருண்டு வந்த ராட்சபாறை விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இதை சம்மந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேன்டீ தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம் - பள்ளி மாணவர்கள் சாதனை!

Last Updated : Nov 16, 2019, 4:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details