தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு - மக்களை கவர்ந்த மாணவர்களின் நாடகம்! - விபத்து குறித்து தத்ரூபமான நாடகம்

நீலகிரி: குன்னூரில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை விபத்து குறித்து தத்ரூப நாடகத்தை அரங்கேற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

nilgiri
nilgiri

By

Published : Jan 25, 2020, 2:08 AM IST

நீலகிரி மாவட்ட காவல்துறை, கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 31ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், விழாவை தொடங்கிவைத்து பேசுகையில், "நீலகிரி மாவட்டம் 70% விபத்தில்லா மாவட்டமாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது" என்றார்.

சாலை பாதுகாப்பு வார விழா

மேலும். விழாவில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், அதி வேகத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக அதிவேகத்தில் ஏற்படும் உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள், செல்போன் பேசி வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்து உள்ளிட்டவைகள் குறித்து மாணவ, மாணவிகள் தத்ரூபமான நாடகத்தை அரங்கேற்றினர். இது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: உடலை கொண்டு செல்ல சாலை எங்கே? உறவினர்கள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details