தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2021, 7:58 AM IST

ETV Bharat / state

நீலகிரியில் சோதனையின்றிப் பயணிக்கும் பயணிகளால் தொற்று பரவும் அபாயம்

தமிழ்நாடு எல்லைப்பகுதியான கூடலூர் அருகே கரோனா சோதனை, இ - பதிவு முறையில்லாமல் கேரள மாநிலம், பட்டவயல் வரை பயணிக்கும் பயணிகளால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/08-July-2021/12394894_nil.mp4
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/08-July-2021/12394894_nil.mp4

நீலகிரி: தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்குத் தளர்வுகளை முன்னிட்டு மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கான சாலை மார்க்கப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள்வரும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பவர்கள், உரிய காரணங்களுடன் இ - பதிவு பெற்று பயணிக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரியில் இருந்து, கேரள அரசுப்பேருந்து தமிழ்நாடு எல்லையான பாட்டவயல் பகுதிவரை இயக்கப்பட்டு வருகிறது.

அரசு உத்தரவைப் பொருட்படுத்தாமல் பயணம்

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வீதம், மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு, கேரள எல்லைப்பகுதியான கூடலூர் அருகே வசிக்கும் இரு மாநில மக்கள், அரசு உத்தரவை பொருட்படுத்தாமல் பாட்டவயல் வரை இயக்கப்படும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.

மாநிலங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு - ஆனால், அதை அலட்சியப்படுத்தும் பயணிகள்

ஆவணங்களை ஆய்வு செய்யாத அலுவலர்கள்

இவ்வாறு பயணிப்போரிடம் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய ஆவணம், இ - பதிவு உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு சுகாதார, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்வதில்லை.

அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், பயணிகளின் அனுமதியில்லாத இந்தப் பயணம் தொற்று பரவல் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் எந்த அலையையும் சமாளிக்கலாம் - சுகாதாரத்துறை செயலாளர்.

ABOUT THE AUTHOR

...view details