நீலகிரி : குன்னூர் உழவர் சந்தையில் குன்னூர் நகராட்சி சார்பாக குப்பை கிடங்கு மூலம் உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் சுமார் 5,000 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.மேலும் தோட்ட தொழிலாளர்களின் வங்கி, தனியார் தங்கும் விடுதி, தனியார் மருத்துவமனையும் உள்ளன. இப்பகுதியில் இயங்கி வந்த குப்பை கிடங்கு கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. தற்போது அப்பகுதியில் ஈக்கள், புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.