நீலகிரி:அரசு மற்றும் தனியார், டி போர்டு வாகனங்கள் தங்களது வாகனங்களை ஓட்டுவதற்குத் தகுதியானதாக இருப்பதாக வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மூலம் எப்.சி(vehicle fitness certificate) எனப்படும் தகுதிசான்று பெற்றப் பின் இயக்கப்பட வேண்டும் என்பது அரசின் விதி.
இந்நிலையில் குன்னூர் நகராட்சிக்குச்சொந்தமான 30 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக இயக்கப்படும் சிறிய லாரிகள், மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யும் லாரி என 5-ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதிச்சான்று பெறாமல் பல்வேறு பழுதுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இந்த வாகனங்களின் டயர்கள் தேய்ந்தும், அடிக்கடி பழுதாகியும் வருவதால் பணிமனையில் விட்டு இவற்றைப்பழுது நீக்கி, தரச்சான்றுடன் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.