நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதிகளில் கட்டட வேலைக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட ஒரு குழுவினர் வந்திருந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமலும், உணவிற்காகவும் தவித்துவந்தனர்.
இதையடுத்து அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மஞ்சூர் காவல் நிலையத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தொடர்புகொண்டனர். அப்போது ஊரடங்கு காரணமாக அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காலை மஞ்சூர் பிக்கட்டியிலிருந்து ஐந்து பேரும் திருச்சிக்கு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.