தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களுக்கு அவரு தான் வேணும்! வருவாய் கோட்டாட்சியருக்காக உயர்ந்த கைகள்! - வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்

நீலகிரி: மக்களிடம் சிறப்பாகப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்ற கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் வாணியம்பாடி பகுதிக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் ஏராளமானோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

revenue officer transfer  village people protest in kudaloor  வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்  revenue officer transfer people protest
revenue officer transfer people protest

By

Published : Dec 2, 2019, 9:58 PM IST

கூடலூர் வருவாய் கோட்டாட்சியராக 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி தீர்வு கண்டு வந்தார். குறிப்பாக, பழங்குடியின மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி, பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குளிருந்து பழங்குடியின மக்கள், பிற சமூக மக்கள் ஆகியோர் வெளியேற்றம் செய்யப்பட்டதில் நடந்த, பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பான விசாரணையை நேர்மையாக மேற்கொண்டார். முதுமலையிலிருந்து வெளியேறிய பழங்குடியின மக்களுக்கு அரசின் புறம்போக்கு நிலம் ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

உள்ளாட்சி உங்களாட்சி 9 - ஊராட்சித் தலைவரின் பணிகள்

இந்த சூழலில், தீடீரென அவர் வாணியம்பாடி வருவாய் கோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பழங்குடியின மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்ததையடுத்து, கிராம மக்கள் ஒன்றுகூடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அவரது பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீண்டும் ஒரு வருட காலமாவது கூடலூரில் பணியாற்ற வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details