நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயர்களால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னூர் வரை இயக்கப்பட்டது. இதனையடுத்து 1908ஆம் ஆண்டு உதகை வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பற்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது.
மீண்டும் தொடங்கிய ரயில் சேவை இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவும் பாறைகளும் விழுந்து ரயில் பாதை சேதமடைந்தது. பின்னர் மலை ரயில் பாதை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்வரை மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.