மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாழும் ஆதிவாசி மக்கள் தயாரித்த கைவினை பொருள்கள் விற்பனை கண்காட்சியானது ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நீலகிரி மட்டுமின்றி, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பண்பாட்டு மையத்தில் அலங்கார பொருள்கள், பாரம்பரிய உடைகள், ஓவியத்துடன் கூடிய துணிகள், கற்களால் செய்யப்பட்ட டம்ளர்கள், குடுவைகள், மண்பாண்டங்கள், பொம்மைகள் ஆகியவை தாயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் குன்னூர் பகுதியில் உள்ள புதுக்காடு குறும்பாடி பம்பலக்கோம்பை பழங்குடியினர் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரும் காட்டுத்தேன், புளி, கடுக்காய் என பல்வேறு இயற்கை பொருள்களை கொண்டு வாசனை திரவியங்கள், சோப்பு, ஊறுகாய், பழரசங்கள் உள்ளிட்ட பொருள்களும் உள்ளன.
இந்தப் பொருள்களானது குன்னூரில் பெயரளவிற்கு ஒரு நாள் மட்டுமே வாகனங்களில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஓராண்டிற்கு முன்பு காட்டேரியில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் உள்பட ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பழங்குடியினரின் பொருள்களை விற்பனை மையமாக்க ஆய்வு செய்தனர்.
ஆனால் இன்று வரை இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், குன்னூர் காட்டேரியில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என மக்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
இதையும் படிங்க:கரூரில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்