குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சமரம் பகுதியில், தண்ணீர் தேவைக்காக யானைகள் தண்டவாளத்தைக் கடந்து சென்று வருகிறது. அண்மையில் குன்னூர் மேட்டுப்பாளையம் வனப் பகுதி ஈச்சமரம் பகுதியில் 11 யானைகள் முகாமிட்டன.
தற்போது அப்பகுதியில் தண்டவாளத்தின் அருகே தனியாரைச் சேர்ந்த சிலர் வேலிகள் அமைத்து கட்டுமான பணிகளுக்கான பொருட்களை வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ஓடையை சுற்றிலும் வேலி அமைத்து, அங்குள்ள பாறைகளை பயன்படுத்தி வழித்தடம் அமைத்துள்ளனர்.
தனியாரும், அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் கடந்து செல்லும் பாதையில் எவ்வாறு வேலிகள் அமைக்க அலுவலர்கள் அனுமதி அளித்தனர் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.