நீலகிரியின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலைப் பாதையும் ஒன்று. முதுமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், கர்நாடகா, கேரளாவிற்கு செல்லும் மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 36 கொண்டை ஊடி வளைவுகளைக் கொண்ட இந்த சாலையை விரிவாக்கம் செய்வதில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் அதிக விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு 36ஆவது வளைவில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வாகனம் இந்தச் சாலை வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டடது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 36ஆவது வளைவில் தடுப்பு உருளை அமைக்கும் பணி நடைபெற்றது.