தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுமலையில் அணிவகுத்து நின்ற யானைகள் - குடியரசு தின விழா கொண்டாட்டம்! - வனச்சரகரிடம் தேசியக் கொடியளித்த யானை

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், தேசியக் கொடியை யானைகள் ஏந்தி வர, குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

யானைகளுடன் குடியரசு தின விழா கொண்டாடியது தொடர்பான காணொலி
யானைகளுடன் குடியரசு தின விழா கொண்டாடியது தொடர்பான காணொலி

By

Published : Jan 26, 2022, 12:48 PM IST

நீலகிரி:முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இன்று குடியரசுதினவிழா கொண்டாடப்பட்டது.

அங்குள்ள 28 வளர்ப்பு யானைகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. முகாமிலுள்ள குட்டி யானை ரகு, தேசிய கொடியை தனது தும்பிக்கையால் கொண்டுவந்து வனச்சரகரிடம் அளித்தது.

பின்னர் வனச்சரகர் ரகு, யானையிடமிருந்து தேசியக்கொடியை பெற்று தேசிய கொடியை ஏற்றினார்.

அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் அனைத்தும் பிளிறியபடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது. நிகழ்ச்சியில் வனத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:73வது குடியரசு தின விழா - ஆளுநர் ரவி கொடியேற்றினார்.. அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details