நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது ரெட் லீப் எனப்படும் இலைகளே சிவப்பு நிற மலா்களாக மாறும் மலர்கள் பூத்துகுளுங்குவது இந்த சாலையில் பயணிப்போரை பரவசமடைய வைத்துள்ளது. இதனைக்காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மலைமாவட்டமான நீலகிரியில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தின் போது சாலை ஓரங்களில் பல இடங்களில் நிழல் தரும் மரங்களும், அறிய வகை மலா் செடிகளும் நடவு செய்யப்பட்டன. இதனை இன்று (செப்.21) வரை மாவட்ட நிர்வாகமும் தோட்டக்கலைதுறையினரும், சுற்றுலா துறையினறும் பாதுகாத்து வருகின்றனா்.
குறிப்பாக போகன்விலா, ஜெகரண்டா,ரெட்லீப் போன்ற மரங்கள் சாலைகளின் ஓரத்தில் நிழலுக்காக இருந்தாலும் இவற்றில் தற்போது ரெட் லீப் மலர்கள் அதிக அளவு மலரத் துவங்கியுள்ளன. சிவப்பு கம்பளம் விரித்தார் போல் காட்சி தரும் இந்த மலர்கள் சுற்றுலாப்பயணிகளையும் உள்ளூர் மக்களையும் அதிக அளவு கவர்ந்து வருகிறது.
கண்ணுக்கு விருந்தளிக்கும் ரெட் லீப் மலர்கள்.... இந்த அறியவகை மலர்கள் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலுள்ள சாலை ஓரங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் பூத்து குளுங்குவது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகின்றது. அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் நடக்க உள்ள நிலையில், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தற்போதே இந்த மரங்களில் மலர்கள் மலர்ந்து தயாராக உள்ளது சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
இதையும் படிங்க:மேயர் பத்தி பேசியதை ஏற்கனவே டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு