தமிழ்நாடு

tamil nadu

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை

By

Published : May 14, 2021, 7:52 PM IST

நீலகிரி: மாவட்டத்தில் நாளை (மே.15) கனமழைக்கு வாய்ப்புள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நாளை (மே.15) கனமழைக்கு வாய்ப்புள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்படுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

கனமழைக்கு வாய்ப்பு

மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்கள் என 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details