நீலகிரி: குன்னூர் நகர பகுதியில் அரசு லாலி மருத்துவமனை அமைந்துள்ளது. குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இங்கு உள்ள பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் நான்கு மாத சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாள்களாக கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சீர்செய்யுமாறு, நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், நிர்வாகம் கழிவறைகளை சுத்தம் செய்தபோது, குழாயில் சிக்கிய 4 மாத சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.