ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் அரசு மருத்துவமனைக்குள் திரியும் எலிகள் - அச்சத்தில் மக்கள் - அரசு மருத்துவமனைக்குள் திரியும் எலிகள்

குன்னூரில் இயங்கி வரும் அரசு லாலி மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு செய்யப்படும் பிணவறைக்குள் எலிகள் சுற்றித் திரிவதால் அருகேவுள்ள புதர்களை சுத்தம் செய்யக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 18, 2022, 5:46 PM IST

குன்னூர் அரசு மருத்துவமனைக்குள் திரியும் எலிகள்

நீலகிரி:குன்னூர் பகுதியில் உள்ள அரசு லாலி மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், விபத்துகளில் நேரிடும் உயிரிழப்பு மற்றும் மர்மமான முறையில் ஏற்படும் இறப்புகளை உடற்கூராய்வுக்காக இங்குள்ள பிணவறைக்கு கொண்டு சென்று உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பர்.

தற்போது இங்குள்ள பிணவறை பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி கிடைக்கின்றது. மேலும், புதர்களில் எலிகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் இங்கு வைக்கப்படும் பிரேதங்களின் முகங்களில் உள்ள உறுப்புகளை எலிகள் கடித்து விடுவதால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது.

மேலும் இந்த பிணவறையில் புதர்களை அகற்றி பெருச்சாலிகள், பிணவறை உள்ளே வராமல் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அரசிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details