நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் பள்ளியில் பெரும்பாலும் நடுத்தரம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 60 மாணவ, மாணவியர் ஆங்கிலாே இந்தியன் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் ட்ராக் சூட், உள்ளிட்டவை இல்லாத காரணத்தினால் போட்டியில் பங்கு பெறுவது சிரமமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் கண்டோன்மென்ட் துணைத் தலைவர் வினோத்குமார் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அங்குள்ள 60 மாணவ மாணவியருக்கு பள்ளிக்கு நேரிடையாகச் சென்று விளையாட்டில் கலந்து கொள்வதற்கு தேவையான சுமார் 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.