வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், இலங்கையைக் கடந்து தென் தமிழ்நாடு நோக்கி நகர்ந்துவருகிறது. இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி-பாம்பனுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துவருகிறது.
புரெவி புயல்: உதகையில் கொட்டும் மழை! - burevi cyclone
புரெவி புயல் காரணமாக உதகையில் கடும் பனி மூட்டத்துடன் மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
rain-with-heavy-snowfall-in-udaipur-due-to-purivi-storm
அதைத்தொடர்ந்து உதகை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் மழை கொட்டிவருகிறது. அதனால் வாகனவோட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மழையுடன் குளிரின் தாக்கமும் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புரெவி புயல்: பாம்பனில் 60 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றால் பொதுமக்கள் அச்சம்