தோடர் பழங்குடி மக்களை சந்தித்த ராகுல் காந்தி.. பழங்குடி மக்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சி! நீலகிரி: மாவட்டம் உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். மோடி அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டது.
மீண்டும் மக்களவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின் முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். சமீப காலமாக பழங்குடியின மக்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அதில் ஒன்றாக உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மணிப்பூர் கலவரம். இது போன்ற சம்பவங்களும், வெறுப்பு அரசியலும் நாள்தோறும் பரவி வருகிறது. இதற்காக நாடாளுமன்றத்தில் நாள்தோறும் காங்கிறஸ் அரசு குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் இதனை ஆராய்ந்து வரும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் அரசு பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை அரியவும், அவர்களுடன் பழகும் விதமாக அவர்களுடனான சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறது.
இதையும் படிங்க: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி திருவிழா: மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!
இதன் ஒரு பகுதியாக வயநாட்டிற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தந்தார். ராகுல் காந்தி முதலில் கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் மைனலா பகுதி அருகே உல்ல தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த தங்கும் விடுதியில் நீலகிரியின் பிரசித்தி பெற்ற ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கும் முறையை கேட்டறிந்தார். இதனை அடுத்து மீண்டும் கார் மூலமாக உதகை சேரிங்கிராஸ் பகுதிக்கு வந்த ராகுல் காந்திக்கு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மீண்டும் சாலை மார்க்கமாக தலைக்குந்தா அருகே உள்ள முத்த நாடு மந்து தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்தடைந்தார். ராகுல் காந்திக்கு தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, மேளதாள இசையுடன் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களது குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி, தோடர் இன மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார்.
முன்னதாக வரும் வழியில் அரவேணு பகுதியில் தேயிலை விவசாயிகளை கண்ட ராகுல் காந்தி காரை விட்டு இறங்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தோளின் மீது கைப்போட்டு சகஜமாக பேசினார். இந்நிகழ்ச்சியை முடித்த ராகுல் காந்தி உதகையில் இருந்து சாலை மார்க்கமாக கூடலூர் பகுதிக்கு சென்று அங்கிருந்து தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா விவகாரம் - ஆளுநர் ரவி மீது திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கடும் விமர்சனம்