நீலகிரி: குன்னூர் பர்லியார் தோட்டக்கலைப் பண்ணை, கல்லார் தோட்டக்கலை பண்ணையில் உள்ள துரியன், மங்குஸ்தான் பழங்களை அறுவடை செய்ய இன்று (ஜூலை 08) குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை அலுவலகத்தில் டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டரின் போது பார்லியார் பகுதியைச் சேர்ந்த குட்டன், நாகராஜ் ஆகிய இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. டெண்டர் நடைபெறும் இடத்தில் வெளியே அழைத்து செல்லப்பட்ட இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வியாபாரிகள் - nilgris latest news
குன்னூர் பர்லியார் மங்குஸ்தான் பழங்களை அறுவடை செய்ய விடப்பட்ட டெண்டரில் பங்கேற்ற வியாபாரிகள் திடீரென நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் புரண்டு சண்டை போட்டுக் கொண்ட வியாபாரிகள்
தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டு சாலையில் கட்டிப்புரண்டு உருண்டனர். வியாபாரிகள் இருவர் சாலையில் சண்டையிட்டு கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நிவாரணத் தொகை - மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!