தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

201 மி.மீ மழை: வெள்ளத்தில் மூழ்கிய பழங்குடியின கிராமம்!

நீலகிரி: ஒரே நாளில் 201 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புரமணவயல் பழங்குடியின கிராமம் தண்ணீரில் மூழ்கியது.

தண்ணீரில் மூழ்கிய பழங்குடியின கிராமம்!
தண்ணீரில் மூழ்கிய பழங்குடியின கிராமம்!

By

Published : Aug 4, 2020, 12:59 PM IST

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. நேற்று ( 03-08-2020 ) ஒரே நாளில் மட்டும் கூடலூரில் 201 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்ததால் மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கூடலூரில் உள்ள புரமணவயல் பழங்குடியின கிராமம் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலைப்போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

தண்ணீரில் மூழ்கிய பழங்குடியின கிராமம்!

வெள்ளத்தில் தெங்குமரஹடா கிராம தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பொன்னாணி ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் உடைந்துள்ளதால் தாழ்ந்த பகுதியில் உள்ள நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details