நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெயில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்திலும் மலைப்பாதைகள் முழுவதும் பசுமை திரும்பி பார்ப்பதற்கு ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் யானைகளுக்கு பிடித்த உணவுகளான மூங்கில், வாழை மரங்கள் மற்றும் கோரைப் புற்கள் ஆகியன அதிகமாக செழிப்பாக வளர்ந்துள்ளன. இதனை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் குன்னூர் பகுதிக்குள் படையெடுத்து வரத் தொடங்கியுள்ளன.
Video: குன்னூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பீதி! - பொதுமக்கள் பீதி
குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (ஏப்.4) இரவு நேரத்தில் கரிமரா என்ற பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் வரிசையாக சாலையில் நடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டும்வரை, இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீர் தேடி வந்த ஆண் யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம்