நீலகிாி மாவட்டம் குன்னுாா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவுப்பகுதியாக பாலியாறு பகுதி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள உணவகங்களிலிருந்து கழிவு மற்றும் குப்பைகளை குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டுவதால் கரடியின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலியாறில் குவியும் குப்பை: கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் - bear walking
நீலகிாி : குன்னுாா் அருகே உள்ள பாலியாறு பகுதியில் குவியும் குப்பைகளால் கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
paaliyar
இரவு நேரத்தில் வரும் கரடி தற்போது பகல்நேரத்திலேயே வருவதால் குடியிருப்புப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் என்றும் அதனை மீறி குப்பைகள் கொட்டும் கடை உாிமையாளா்களுக்கு பாலியாறு ஊராட்சி அலுவலர்கள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்